• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பீர்-க்காக சண்டை: திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் - தனியார் நிறுவன அதிகாரி மீது போலீஸ் வழக்குப்பதிவு

பீர்-க்காக சண்டை: திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் - தனியார் நிறுவன அதிகாரி மீது போலீஸ் வழக்குப்பதிவு

சூர்யா

சூர்யா

பிறந்த நாள் கொண்ட்டாட்டத்தின் போது நட்சத்திர ஓட்டலில் பீர் வாங்கிக்கொடுக்கும்படி நண்பரிடம் திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா சண்டை போட்டதால் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா தனது நண்பர்களின் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதற்காக நான்கு நண்பர்களோடு கடந்த சனிக்கிழமை இரவு அண்ணா சாலையில் உள்ள பார்க் ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

அங்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு மதுபோதையில் வெளியில் நட்சத்திர விடுதியின் வாசலில் நண்பர்களோடு பேசிக்கொண்டுந்த போது தனது முன்னாள் நண்பரான பஜாஜ் நிறுவனத்தின் மண்டல மேலாளராக உள்ள கோடம்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவரை பார்த்துள்ளார்.

பின்னர் அவரிடம் பேசிவிட்டு 4 பீர் ஆர்டர் செய்யும்படி எம்.பி சிவாவின் மகன் சூர்யா கேட்டுள்ளார். ஸ்ரீராமும் 4 பீர்களை ஆர்டர் செய்து பில் கொடுப்பதற்காக ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார்.

ஆனால் சிக்னல் இல்லாததால் ஏ.டி.எம் கார்டிலிருந்து பார்க் ஹோட்டல் ஊழியரால் பணத்தை எடுக்கமுடியவில்லை. இதனால்  பணத்தை எடுக்க முடியவில்லை என ஊழியர் கூற சூர்யாவும் அவரது நண்பர்களும் பணம் இல்லாத கார்டை கொடுத்து எங்களை நக்கல் செய்கிறாயா என ஸ்ரீராமிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனால் ஸ்ரீராமுக்கும், சூர்யா மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில் ஸ்ரீராமை தாக்குவதற்காக சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் பீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு துரத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால், ஸ்ரீராம் ஹோட்டலுக்குள் சென்று 100 க்கு கால் செய்துள்ளார். மேலும், சூர்யா அவரது காரை ஹோட்டலின் முன் நிறுத்தி யாரும் உள்ளேயும் வெளியேயும் செல்லாதபடி தகராறு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருதரப்பினரையும் தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
பீர்வாங்கி கொடுக்காததால் தன்னை கொலை செய்யும் நோக்கோடு பீர் பாட்டிலை கொண்டு தாக்க முற்பட்டதாக ஸ்ரீராம் புகார் கொடுத்தார்.

மேலும், பிரச்சனையின் போது ஸ்ரீராம் காரிலிருந்து கத்தியை எடுத்து வந்து தன்னையும் தனது நண்பர்களையும் தாக்க வந்தார் என சூர்யா எதிர் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனான சூர்யா மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல்,  பிறக்கு காயம் ஏற்படுத்துதல்,  குற்றம் கருதி மிரட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல ஸ்ரீராம் மீதும் மேற்கண்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: