ரஜினியை விட சாதித்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர் - சீமான்

"திருவள்ளுவர் சிலைக்கு விபுதி அனிவித்து காவி வேட்டி கட்டுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்"

ரஜினியை விட சாதித்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர் - சீமான்
ரஜினி | சீமான்
  • News18
  • Last Updated: November 4, 2019, 12:19 PM IST
  • Share this:
ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக இருப்பதால் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டது தொடர்பாக, மதிமுகவின் மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தொடுத்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 14 பேர், திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து, சீமான் மீண்டும் 13-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை மீது தாக்குதல் நடத்தியிருப்பதும், திருவள்ளுவருக்கு காவி வேட்டி கட்டி கட்டிவிடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.


மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்வது பழிவாங்கும் நடவடிக்கை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

ரஜினிகாந்த் பாஜகவுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் வாழ்நாள் சாதனை விருது கொடுத்துள்ளார்கள். அவரைவிட சாதித்தவர்கள் கமல்ஹாசன், இளையராஜா பாரதிராஜா, என ஏராளமானோர் இருக்கின்றனர்.

திருவள்ளுவர் சிலைக்கு விபுதி அனிவித்து காவி வேட்டி கட்டுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்கு பிறகு தான் இந்து இந்து மதத்துக்கும் இந்து, இந்தியா என்கின்ற வார்த்தைகள் எல்லாம் வந்தது. வள்ளுவருக்கு காவி அணிவித்து பொதுமறையை மறந்து தன்வயப்படுத்த நினைக்கிறது பாஜகதிமுக தலைவர் ஸ்டாலின் அவருடைய மகனை முன் நிறுத்துவதால் வாரிசு அரசியல் என்று சொல்லுகிறார்” என்று கூறினார்.

First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading