ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சியில் உருவாகியுள்ள புதிய ரவுடி கும்பல்: அதிர்ச்சியில் மக்கள்

திருச்சியில் உருவாகியுள்ள புதிய ரவுடி கும்பல்: அதிர்ச்சியில் மக்கள்

நண்பர்களுக்காக இளைஞர்களே களமிறங்கி கொலை செய்த சம்பவம் போலீசாரை மட்டுமின்றி, உள்ளூர்வாசிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ரவுடிகள் குணா, முட்டை ரவி வரிசையில் தற்போது புதிதாக ரவுடிகள் உருவெடுத்துள்ளனர்.

நண்பர்களுக்காக இளைஞர்களே களமிறங்கி கொலை செய்த சம்பவம் போலீசாரை மட்டுமின்றி, உள்ளூர்வாசிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ரவுடிகள் குணா, முட்டை ரவி வரிசையில் தற்போது புதிதாக ரவுடிகள் உருவெடுத்துள்ளனர்.

நண்பர்களுக்காக இளைஞர்களே களமிறங்கி கொலை செய்த சம்பவம் போலீசாரை மட்டுமின்றி, உள்ளூர்வாசிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ரவுடிகள் குணா, முட்டை ரவி வரிசையில் தற்போது புதிதாக ரவுடிகள் உருவெடுத்துள்ளனர்.

 • 2 minute read
 • Last Updated :

  திருச்சியில் புதிய ரவுடி கும்பல் உருவாகியுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். முக்கியமான ரவுடி கும்பல்களில் இணைந்துள்ள இளைஞர்கள் கொலை செய்யவும் தயங்குவதில்லை என காவல்துறையினர் கூறுகின்றனர். 

  சின்னச் சின்ன குற்றங்களில் சிக்கும் இளைஞர்கள், சிறைக்குள் கிடைக்கும் நட்புகளால் ரவுடிகள் கும்பலில் இணைந்து விடுகின்றனர். அதற்குப் பிறகு பிரபல ரவுடியாக விஸ்வரூபம் எடுப்பதை ஜிகர்தண்டா திரைபடத்தில் பார்த்திருக்கிறோம். அப்படியொரு நிஜக்கதை திருச்சியில் நடந்துள்ளது.

  திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரத்தைச் சேர்ந்தவர் சந்துரு. 37 வயதான இவர் மண்ணச்சலூர் ரவுடி குணாவின் நண்பர் எனக் கூறப்படுகிறது. இவர் மீது, பாலக்கரை காவல் நிலையத்தில், 2 கொலைகள் மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. உடல்நலம் குன்றியதால், வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்றுவந்த சந்துருவை ஒரு கும்பல் படுகொலை செய்துள்ளது.

  கொலை நடந்த இடத்தில் விசாரணை செய்யும் போலீசார்

  செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்து பாண்டி என்பவருடன் ஆட்டோவில் வெளியே சென்றார் சந்துரு. அப்போது கெங்ஸ்டவுன் பள்ளி அருகே ரயில்வே தண்டவாளம் பகுதியின் பின்புறமாக மறைந்திருந்த சில நபர்கள், அவர் மீது  பாய்ந்து கீழே தள்ளி சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் பாண்டிக்கும் சரமாரி வெட்டுக் காயங்கள் விழுந்தன.

  இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார்  விசாரணை நடத்தினர். அப்போது விசாரணையில், மேலப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராபர்ட் அர்ணால்டுக்கும், சந்துருவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்னால் சந்துரு ராபட் அர்ணால்டை தாக்கியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த ராபர்ட் அர்ணால்ட் சந்துருவின் டிரைவர் விஜயை பதிலுக்கு தாக்கி, எச்சரித்து அனுப்பியுள்ளார். அதன்பிறகு தான் தாக்கப்பட்டதை ஓட்டுநர் விஜய் சந்துருவிடம் சொல்லியதால் இரு தரப்புக்கும் இடையே பகை முற்றியது.  இதனைத்தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு, மதுபோதையில் ஓட்டுநர் விஜயை தாக்கியவர்களை பழிக்குப்பழி வாங்க சந்துரு, ஓட்டுநர் விஜய், அவரது நண்பர் பாண்டி ஆகியோர் சென்றுள்ளனர்.

  இதையறிந்த ராபர்ட்,  தனது நண்பர்களான 17 வயது மேத்யூஸ் மற்றும் அமுல்ராஜ், 20 வயதான ராபர்ட் கிங்ஸ்லி, 24 வயதான வீரமுத்து,  20 வயதான தம்பியான், 22 வயதான கெளரீஸ் உள்ளிட்ட 7 பேருடன் சந்துருவை கொலை செய்ய தயாராகியுள்ளார். அதன்பிறகு மிக பயங்கர ஆயுதங்களுடன் சந்துருவை வெட்டிக் கொலை செய்வதற்கு தயார் நிலையில் கெங்ஸ்டவுன் பள்ளி அடுத்த, ரயில்வே தண்டவாளம் பகுதி அருகே மறைந்து இருந்துள்ளனர்.

  அப்போது அங்கு ஆட்டோவில் வந்த சந்துருவை சங்கர் என்பவரது வீட்டின் அருகே இந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. தாக்குதலில் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்தவர்கள் காயங்களுடன் தப்பியோடினர்.

  கொலை செய்த ராபர்ட் அர்ணால்டு மின் ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார். மேத்யூஸ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவருகிறார். அமுல்ராஜ், ராபட் கிங்ஸ்லி ஆகியோர் கூலி வேலை செய்து வந்தனர். மேலும் கெளரீஸ் கண்ணாடி வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். தம்பியான் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். பீமநகரைச் சேர்ந்த பாண்டியன் என்கிற வீரமுத்து மீது பல்வேறு அடிதடி, வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் 8-ம் வகுப்பு வரை தான் படித்துள்ளனர். அதேபோல், அனைவரும் நண்பர்களாக  இருந்துள்ளனர்.

  மேலும் இவர்களுக்கு இடையேயான மோதலைப் பார்த்த பொதுமக்கள், பாலக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த பாண்டி அரசு தலைமை மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சந்துருவை கொலை செய்தவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  சந்துருவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது மனைவி மஞ்சு மற்றும் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நண்பர்களுக்காக இளைஞர்களே களமிறங்கி கொலை செய்த சம்பவம் போலீசாரை மட்டுமின்றி, உள்ளூர்வாசிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ரவுடிகள் குணா, முட்டை ரவி வரிசையில் தற்போது புதிதாக ரவுடிகள் உருவெடுத்துள்ளதை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  ' isDesktop="true" id="59905" youtubeid="P3j94puEzkI" category="tamil-nadu">

  First published: