ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

12 பேருக்கு சம்மன்.. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் புலனாய்வுக்குழு முக்கிய முடிவு!

12 பேருக்கு சம்மன்.. திருச்சி ராமஜெயம் கொலைவழக்கில் புலனாய்வுக்குழு முக்கிய முடிவு!

ராமஜெயம் கொலை வழக்கு

ராமஜெயம் கொலை வழக்கு

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் முதற்கட்டமாக, சாமி ரவி, சீர்காழி சத்யராஜ், கணேசன் உள்ளிட்ட 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் முதற்கட்டமாக, 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவெடுத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, அவர்கள் அனைவரும் வரும் ஒன்றாம் தேதி நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

  திமுகவில் தற்போது அமைச்சராக இருக்கும் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் உள்ள திருவளர்ச் சோலையில் காவிரி ஆற்றின் கரையோரம் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தது.

  இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ,இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார், கொலை நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை.

  இந்த நிலையில் பத்து ஆண்டுகளுக்கு பின் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ராமஜெயத்தின் கொலை வழக்கு வேகம் எடுத்தது. எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டி.எஸ்.பி மதன் மற்றும் ஆய்வாளர்கள் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  மயிலாப்பூர் எம்.எல்.ஏ கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் கணேசன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

  இதையும் படிங்க: முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் தமிழக உளவுத்துறை கோட்டை விட்டுள்ளது - அண்ணாமலை மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

  எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்துவிட்டு, பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.

  இந்த நிலையில் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் முதற்கட்டமாக, சாமி ரவி, சீர்காழி சத்யராஜ், கணேசன் உள்ளிட்ட 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவெடுத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு, அவர்கள் அனைவரும் வரும் செவ்வாய்க்கிழமை நேரில் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Crime News