காவலர் தூக்கிட்டு தற்கொலை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் காரணமா என போலீஸார் விசாரணை..

26 வயதான ஆனந்த், வாத்தலை காவல் நிலைய காவலர், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

காவலர் தூக்கிட்டு தற்கொலை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுகள் காரணமா என போலீஸார் விசாரணை..
காவலர் தற்கொலை
  • Share this:
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராயத்துறை அருகே பெரியார் நகரைச் சேர்ந்தவர் 26 வயதான ஆனந்த். வாத்தலை காவல் நிலைய காவலரான இவர், தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு சென்றவர், இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில், தனது அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் இறந்துள்ளார். இன்று அதிகாலை மாட்டு கொட்டகைக்கு சென்ற ஆனந்தின் தந்தை கோவிந்தராஜ் தனது மகன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து,  காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார். போலீசார் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு  உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

துக்கிட்டு இறந்த ஆனந்த் ஆன்லைனில் ரம்மி (சீட்டு ஆட்டம்) விளையாடுவதை வழக்கமாக செய்துள்ளார். இதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வாங்கியுள்ளார். அப்படி  கடனை திரும்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து கூறப்படுகிறது. ரம்மி விளையாட்டால் தற்கொலையா? காதல் விவகாரம் உள்ளிட்ட வேறு ஏதேனும் காரணங்களா? என்று ஜீயபுரம் காவல் நிலைய  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading