சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் திருச்சி ஆம்னி பஸ் ஸ்டாண்ட்... பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் அவதி

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் திருச்சி ஆம்னி பஸ் ஸ்டாண்ட்... பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் அவதி
  • Share this:
திருச்சி தனியார் ஆம்னி பேருந்து நிலையம் கடுமையான சேறும், சகதியுமாக மாறியுள்ளதாக, பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மத்திய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்துகளுக்காக 2 ஏக்கர் பரப்பளவுள்ள ரயில்வே இடத்தில் தனியார் பேருந்து நிலையத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது.

தனியார் ஒப்பந்ததாரரால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இங்கிருந்து சென்னை, பெங்களூரு, திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பெரு நகரங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகளை நிறுத்த முதலில் ₹ 125 கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது ₹ 165 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தினமும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன.
இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் தனியார் பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
இதனால் பேருந்துகள் சேறாகி, இருக்கைகள் வீணாகின்றன. பயணிகளுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பேருந்துகளுக்கான பராமரிப்பு செலவும் அதிகரிக்கிறது. பயணிகளும் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வரத் தயங்குகிறார்கள். இதனால் மீண்டும் சாலை ஓரங்களில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். ஆனால் போக்குவரத்து காவல்துறையினர் விரட்டுகிறார்கள். ஒவ்வொரு மழை பெய்யும் போதும் இப்படித்தான் ஆகிறது. பேருந்து நிறுத்த கட்டணத்தை உயர்த்தினார்கள். ஆனால் அடிப்படை வசதியைக் கூட செய்யவில்லை.

சிமெண்ட் தளம் அமைக்கப்படும் என்று சொன்னார்கள் ஆனால் தற்போது வரை அமைக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என்று ஓட்டுநர்கள், பயணிகள் தெரிவிக்கின்றனர். நிரந்தர தனியார் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: December 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading