முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி - முப்படைகளுக்கான பிரத்யேக தயாரிப்பு

திருச்சி ஓஃப்டியில் தயாரான ட்ரிகா ரக துப்பாக்கி - முப்படைகளுக்கான பிரத்யேக தயாரிப்பு

புதிய ரக துப்பாக்கி

புதிய ரக துப்பாக்கி

டிரிகா ரக துப்பாக்கிகள் வழக்கமான இயந்திர துப்பாக்கியை விட நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்டது.

  • Last Updated :

முப்படைகளிலும் பயன்படுத்தும் வகையிலான புதிய ரக துப்பாக்கியை திருச்சி படைக்கலத் தொழிற்சாலையில் (OFT) தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகே இந்திய பாதுகாப்புத்துறையின் படைக்கலத் தொழிற்சாலை (OFT) உள்ளது. ராணுவம், கடற்படை, எல்லைப் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான கருவிகள் குறிப்பாக துப்பாக்கிகளை தயாரித்து வருகின்றனர்.இதன்படி, ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் இஸ்ரேல் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் SRGC 12.7 mm என்கிற அதி நவீன துப்பாக்கியை கடலோர காவல் படைக்கு கடந்த 17ம் தேதி வழங்கினர்.

இந்நிலையில், ட்ரிகா (Trica) ரக துப்பாக்கியை (7.62x39 மி.மீ கார்பைன்) தயாரித்துள்ளது.இதை திருச்சி படைக்கலத் தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.

ட்ரிகா துப்பாக்கி

ட்ரிகா (7.62 X 39 மிமீ கர்பைன்) துப்பாக்கியின் சிறப்பம்சங்கள்

இந்த  (Trica) துப்பாக்கி  ஆர் மற்றும் படைகலத் தொழிற்சாலையின் ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவினால்,  உருவாக்கப்பட்ட இலகுவான சிறிய ரக ஆயுதம்.போர் விமானங்கள்,  ஹெலிகாப்டர்கள், பாராசூட்டுகள்,  காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படைகள், முக்கியத்துவம் மிகுந்த கட்டிடத்தை பாதுகாக்கும் படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.இது ஒப்பிட்டு அளவில் சக்தி வாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதம் ஆகும்.

இந்த துப்பாக்கியில் சிறப்பு முகவாய் பூஸ்டர் உள்ளது. சுடும் போது ப்ளாசை மறைக்கவும், ஒலியை குறைக்கவும் உதவுகிறது. வழக்கமான இயந்திர துப்பாக்கியை விட நீண்ட தூரம் தாக்கும் திறன் கொண்டது. மற்ற தாக்குதல் துப்பாக்கிகளான அசால்ட் ரைப்பில்  வெடிமருந்துகள் மற்றும் உபகரணங்களையும் பயன்படுத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி ஓஃப்டி அதிகாரிகள்

அதே போல் திருச்சி அசால்ட் ரைபிள் (TAR) மற்றும் ஏகே-47 உதிரி பாகங்களையும்  பயன்படுத்தலாம்.  மேலும் இந்தத் துப்பாக்கியை பாதுகாப்புப்படை வீரர்கள் தங்களின் கவச  ஜாக்கெட்டுகள் மற்றும் உடைகளின் கீழ் கூட மறைத்து பயன்படுத்தலாம். இப்படி பல சிறப்புகளை ட்ரிகா துப்பாக்கி கொண்டுள்ளது. துப்பாக்கி அறிமுக விழாவில், கூடுதல் பொது மேலாளர்கள் ராஜீவ் ஜெயின், ஏ கே சிங் மற்றும் இணை பொது மேலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Air force, Army, Gun, Indian Navy, Navy, Trichy