ஆடிப் பெருக்கு : முக்கொம்பு, காவிரி படித்துறைகளில் அனுமதியில்லை - காவல்துறை

கொரோனா ஊரடங்கு தடையினால் ஆடிபெருக்கான நாளை புதுமண தம்பதிகள் காவிரி படித்துறைகளில் வழிபட காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

ஆடிப் பெருக்கு : முக்கொம்பு, காவிரி படித்துறைகளில் அனுமதியில்லை - காவல்துறை
ஆடிபெருக்கு (கோப்பு படம்)
  • Share this:
ஆடி மாதம் 18ம் தேதியான ஆடிப்பெருக்கு நாளில் பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரியைத் தாயாக நினைத்து மங்கலப் பொருட்களை வைத்து  புதுமணத் தம்பதிகள்  வணங்குவது வழக்கம்.  திருமணத்தன்று அணிந்திருந்த மாலைகளை  காவிரியை வணங்கி,  ஆற்றில் விட்டு, தாலியைப் பெருக்கி அணிந்து கொள்வார்கள்.

இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதையடுத்து ஆடிப் பெருக்கிற்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, அங்காளம்மன், சிந்தாமணி ஓடத்துறை படித்துறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் புது மணத் தம்பதிகள் உட்பட பொது மக்கள் கூட, வழிபட அனுமதியில்லை என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் காவிரி நீர்தான்  குடி நீராக விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே காவிரியை வழிபட மாநகராட்சி ஆணையர் சிவ சுப்பிரமணியன்  வலியுறுத்தியுள்ளார்.


நம்பெருமாள் புறப்பாடு

ஆடிப் பெருக்கை முன்னிட்டு நாளை பிற்பகல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் காவிரிக்கு சீர் கொடுக்கும் நிகழ்வு பட்டர்கள் உள்ளிட்ட சிலர் மட்டும் பங்கேற்கும் வகையில் எளிமையாக நடைபெறும். வழக்கமாக ஸ்ரீரங்கம் கோயிலிருந்து யானையில் அமர்ந்து நம்பெருமாள் படித்துறைக்கு வந்து காவிரிக்கு சீர் வழங்கி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.

இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் நம்பெருமாள் யானையின் மீதமர்ந்து காவிரி அம்மா மண்டபம் படித்துறைக்கு வராமல் கோயிலுக்குள் புறப்பாடு நடைபெற உள்ளது. நம்பெருமாளிடமிருந்து சீர் பொருட்களைப் பட்டர்கள் பெற்று வந்து, காவிரிக்கு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading