ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து, புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில் பிரதமர் ஆராய்ச்சி கூட்டுறவுத் திட்டம் (PMRF) கடந்த 2018ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
மத்திய அரசின் உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களான IIT , IISER, IISc உள்ளிட்ட சிலவற்றில் மட்டும் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில்,தேசிய அளவில் முதல் 25 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல் முறையாக திருச்சியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழகம் (NIT) தற்போது PMRFல் இடம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும், 20 ஆராய்ச்சி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு தலா ₹ 70 ஆயிரம், மூன்றாம் ஆண்டு ₹ 75 ஆயிரம், 4, 5ம் ஆண்டுகளுக்கு தலா 80 ஆயிரம் உதவித் தொகையும் ஆண்டுக்கு ₹ 2 லட்சம் அளவிலான ஆராய்ச்சி, வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட இதர செலவினங்களுக்கான தொகை என மொத்தம் ₹ 13.75 லட்சம் வரை ஆராய்ச்சிக்கான உதவித் தொகை வழங்கப்படும்.
மற்ற ஆராய்ச்சித் திட்டங்களை விட இத்திட்டத்தில் தேர்வு பெறுவோருக்கு இருமடங்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால், ஆய்வுத் தரம் உயர்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும். இத்திட்டத்தின் கீழ் திருச்சி என்.ஐ.டி தேர்வு பெற்றிருப்பது மிகப் பெரிய அங்கீகாரம். இளம் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்கிறார் இதன் இயக்குநர் மினி ஷாஜி தாமஸ்.
Also see...
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.