சிந்துபாத்தும் நித்தியானந்தாவும் - கன்னித்தீவா கைலாசா நாடு ? - நித்யானந்தாவை புகழும் இளைஞர்கள்

பேனர் வைக்கும் அளவுக்கு நித்யானந்தாவின் புகழ் திக்கெட்டும் பரவி வருகிறது.

சிந்துபாத்தும் நித்தியானந்தாவும் - கன்னித்தீவா கைலாசா நாடு ? - நித்யானந்தாவை புகழும் இளைஞர்கள்
கன்னித்தீவா கைலாசா நாடு ?
  • Share this:
நித்யானந்தா யாரைக் கவர்ந்திருக்கிறாரோ இல்லையோ தமிழக இளைஞர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறார். அவரது நோ சூடு நோ சொரணை தாரக மந்திரம், இளைஞர்களைக் கவர்ந்து, தற்போது திருமணத்திற்கு அவரது படத்தைப் போட்டு பேனர் வைக்கும் அளவிற்கு சென்றிருக்கிறது.

தன் மீது பாயும் வழக்குகளில் இருந்து தப்பிக்கவோ அல்லது தனது சீடர்களுக்கு ஆறுதல் சொல்லவோ, அல்லது தனது கோபத்தை வெளிப்படுத்தவோ நித்யானந்தா இப்படி பேசினாரா என்பது தெரியாது. ஆனால் நித்தியின் நெத்தியடி பஞ்ச் வசனங்கள் தற்போது தமிழக இளைஞர்களின் டிரெண்டிங் ஆக இருக்கிறது. எது நடந்தாலும் கவலைப்படாத நித்யானந்தாவின் மனப்போக்கு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது,.

பாலியல் பலாத்கார வழக்கு, குழந்தைகள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் காரணமாக இன்டர்போல் மூலம் தேடப்படும் சாமியராக நித்யானந்தா மாறி விட்டார். எனினும் உள்ளூரில் இன்னும் அவர்களுக்கு பாசக்கார சீடர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். நித்யானந்தாவைப் போல தாங்களும் குறுகிய காலத்தில் பேமஸ் ஆகியே தீருவோம் என கங்கணம் கட்டிக் கொண்டு அவருக்கு பேனர் வைத்துள்ளனர் இந்த பாசக்கார இளைஞர்கள்.திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து பூவாளூர் அருகே பல்லவபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் - விஜி ஆகியோரின் திருமணம் லால்குடி அருகே உள்ள ஸ்ரீ தேவி திருமண மண்டபத்தில் ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவை முன்னிட்டு, மாப்பிள்ளையின் நண்பர்கள் வித்தியாசமான முறையில் பல்வேறு பேனர்கள் வைத்திருந்தனர்.

அவற்றில், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என வேடிக்கையான வாசகங்களையும் அச்சடித்திருந்தனர். இந்த நிலையில், மணமக்களை நித்யானந்தா வாழ்த்துவது போல் படங்களை வைத்து, கீழே கைலாசவாசிகள் - பல்லபுரம் என குறிப்பிட்டு ஒரு பெரிய பேனரை வைத்துள்ளனர்.பேனரின் மேல் பகுதியில் நித்யானந்தாவின் புகழ் பெற்ற அருளுரையான நோ சூடு நோ சொரணை என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளனர். இந்த பேனர் திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை மட்டுமின்றி அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களையும் கவர்ந்து இழுத்துள்ளது. அந்த வழியாகச் செல்வோர் சில நொடிகள் நி்ன்று பார்த்து விட்டு புன்னகையுடன் கடந்து செல்கின்றனர்.

பேனர் வைத்த இளைஞர்களிடம் கேட்டபோது நித்யானந்தாவின் அருமை பெருமைகளால் ஈர்க்கப்ப்டடு பேனர் வைத்ததாகக் கூறியுள்ளனர். டிக்டாக்கில் எப்போதுமே நித்யானந்தா தான் டிரெண்டிங் கடவுளாக இருந்து வருகிறார். அவரைக் கலாய்க்காத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை புகுந்து விளையாடியுள்ளனர்

இந்த நிலையில் தற்போது பேனர் வைக்கும் அளவுக்கு நித்யானந்தாவின் புகழ் திக்கெட்டும் பரவி வருகிறது.
First published: August 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading