• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamilnadu Assembly Election 2021 | ஜான் வெஸ்ட்ரி மேல்நிலை பள்ளியில் திருச்சி சிவா வாக்களித்தார்

Tamilnadu Assembly Election 2021 | ஜான் வெஸ்ட்ரி மேல்நிலை பள்ளியில் திருச்சி சிவா வாக்களித்தார்

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட ஜான் வெஸ்ட்ரி மேல்நிலை பள்ளியில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா வாக்களித்தார்.

  • Share this:
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணி அதற்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  திருச்சியில் ஜான் வெஸ்ட்ரி மேல்நிலை பள்ளியில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும்,கொள்கை பரப்பு செயலாளருமான திருச்சி சிவா வாக்களித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். வாக்கு சேகரித்த போது தமிழகம் முழுவதும் மக்களிடையே மிக பெரிய எழுச்சியை பார்க்க முடிந்தது. தமிழ்நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கவும் மாநில உரிமைகளை பாதுகாக்கவும் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்கும். மே - 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்பார்.

ஆட்சி மாற்றம் இன்றி எதுவும் தங்களுக்கு அமையாது என்பது தமிழக மக்களின் மனநிலை. தமிழ்நாடு மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க போகிறது. தமிழக மக்கள் எல்லா வித உரிமையோடும்
சுயமரியாதையோடும் நிற்க திமுக ஆட்சி பொறுப்பேற்கும். வரும் காலம் தமிழக மக்களுக்கு வசந்த காலமாக அமையும்”. என்று கூறினார்.

மேலும் படிக்க... TN Assembly Election 2021 | ஆட்சி மாற்றம் உறுதி என்று கூறி வாக்களித்தார் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு

செய்தியாளர் : கதிரவன்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: