• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சியில் இறைச்சிக் கடைகளுக்கு 21ஆம் தேதி வரை தடை

திருச்சியில் இறைச்சிக் கடைகளுக்கு 21ஆம் தேதி வரை தடை

கறிக் கடை (கோப்பு)

கறிக் கடை (கோப்பு)

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பகுதியில்  கொரொனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நவல்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளை திறப்பதற்கு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
திருச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு 907 பேர் சிகிச்சையில்உள்ளனர். தற்போதுவரை மொத்தம் 8, 235 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 7,204 பேர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இதில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால், ஞாயிற்றுக் கிழமைகளில் மீன், இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
திருச்சி மாநகரம் புத்தூர் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வியாபாரம் செய்ததாக கடை உரிமையாளர்கள் 8 பேருக்கு தலா ₹ 5,000 அபராதம் விதித்து, .மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதில் இறைச்சி வாங்க சென்றவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி பகுதியில்  கொரொனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நவல்பட்டு, அண்ணா நகர், போலீஸ் காலனி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீன் மற்றும் அனைத்து இறைச்சி கடைகளையும் திறப்பதற்கு இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க...இந்தி திணிப்பு - மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களான கோயில், மருத்துவமனை, ஹோட்டல், இ சேவை மையம், வங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்துதான் செல்ல வேண்டும். தேவையில்லாமல் வீட்டைவிட்டு யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் ஊராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: