கொரோனா அச்சம்: 20 பேர் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற திருமணங்கள்..!

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

கொரோனா அச்சம்: 20 பேர் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற திருமணங்கள்..!
திருமணமான தம்பதிகள்
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக குறைந்த அளவில் மட்டுமே நபர்கள் கலந்துகொண்டு திருமணங்கள் நடந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 2-வது நாளாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கொரோனா பரவாமல் இருக்க பொதுமக்கள் மிக அவசிய தேவையின்றி ஒன்று கூட வேண்டாம். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும் அல்லது எளிமையாக நடத்தவும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பேரையூர் கிராமத்தில்  சுப்பிரமணியன் - நர்மதா இருவருக்கும் இன்று காலை  அப்பகுதியில் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. மணமக்களின் உறவினர்கள் 20-க்கும் குறைவானவர்களே இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


மக்கள் நலன் கருதியும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாகவும் இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றதாகவும் இதனால் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என உறவினர்கள் தெரிவித்தனர். இதே போல், திருச்சி மாநகரம் உறையூரில் திருமண மண்டபத்தில் நடக்கவிருந்த திருமணம் மணப்பெண் வீட்டில் இன்று காலை நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே நரசிங்கன்பேட்டை  சந்தானகிருஷ்ணன் என்பவருக்கும் திருச்சி மாநகரம்  உறையூரை சேர்ந்த அமுதா என்பவருக்கும் திருச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையிலும் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் உறையூரில் உள்ள மணப்பெண் வீட்டில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டை சேர்ந்த மொத்தம் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.Also see...
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்