• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 4 பெண்களை மணந்து திருமண மோசடி - காவலர் மகன் கைது..

4 பெண்களை மணந்து திருமண மோசடி - காவலர் மகன் கைது..

Youtube Video

திருச்சியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த காவலர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 4-வது மனைவி அளித்த புகாரில் சிக்கியது எப்படி?

  • Share this:
    திருச்சி மாநகர் ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள புதிய காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மகாலிங்கம் இவர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கார்த்தி வயது 26. இவர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகள் சுமதி வயது 21. செல்போன் மூலம் நட்பு ஏற்பட்டு பின்பு காதலாக மாறி கடந்த ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் திருச்சி திருவரம்பூர் பாலாஜி நகரில் வசித்து வந்தனர். கார்த்திக் அப்பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கணவர் மீது சந்தேகம் அடைந்த சுமதி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது செல்போனை எடுத்துப் பார்த்தபோது பல பெண்களுடன் இருக்கும் போட்டோ இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவரது கணவர் கார்த்தியிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும் கார்த்தியின் குடும்பத்திடம் கேட்ட போது அவர்களும் எதுவும் தெரியாததுபோல் இருந்துள்ளனர்.

    செல்போனில் இருக்கும் பெண்கள் யார் என்று கேட்டபோது திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா சென்னையை சேர்ந்த வாணி, நிலா உள்ளிட்ட 3 பேரை திருமணம் செய்து மேலும் அவர்களுக்கு குழந்தை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதில் அதிர்ச்சி அடைந்த சுமதி தேனி மாவட்டத்திலுள்ள அவர்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் கார்த்தியின் தந்தையிடம் கேட்டபோது அவர்கள் எதுவும் தெரியாதது போல் இருந்து உள்ளனர். ஆனால் கார்த்தி இதை வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.



    இதில் சுமதி வீட்டின் அருகே வசிப்பவர்கள் உதவியோடு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்துள்ளார். லால்குடி அனைத்து மகளிர் போலீசார் புகார் மீது வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்து விசாரணை செய்ததில் கார்த்தி உண்மையை ஒப்புக் கொண்டார். அதை அடுத்து அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: