தவித்த தள்ளு வண்டி வியாபாரி... ஆறுதல் கூறி உதவிய காவல் ஆய்வாளர்...!

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் வரும் நிலையில்,  நாவுக்கரசரின் இதுபோன்ற நற்செயல் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

தவித்த தள்ளு வண்டி வியாபாரி... ஆறுதல் கூறி உதவிய காவல் ஆய்வாளர்...!
காவல் ஆய்வாளர் நாவுக்கரசு
  • Share this:
பாதுகாப்பு பணியின் போது பழ வியாபாரியின் தள்ளு வண்டியை பழுது நீக்கி உதவிய திருச்சி மாநகர போக்குவரத்து காவல்  ஆய்வாளர் நாவுக்கரசை பலரும் பாராட்டி வருகின்றனர்.

திருச்சி மாநகரம் ரேஸ்கோர்ஸ் சாலை அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள ரவுண்டானா திறப்பு விழா அண்மையில்  நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கான போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் திருச்சி மாநகர கோட்டை போக்குவரத்து ஆய்வாளர் நாவுக்கரசன் ஈடுபட்டிருந்தார். அந்த சாலையோரம்  பழ வண்டியை ஒரு பெண் தள்ளிக் கொண்டு வந்தார்.  திடீரென வண்டியின் முன்புற டயர் கழன்று  விழுந்தது.


வி.ஐ.பிகள் வரும் நேரம், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் என பார்த்து பதறற்றமடைந்த அந்த பெண்மணி வண்டியின் டயரை மாட்டிக் கொண்டிருந்தார். ஆனால், அதை சரியாக பொருத்த முடியாமல் தவித்தார்.

அப்போது போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் இருந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசன் பார்த்து, ஓடிச் சென்று தள்ளு வண்டியை தூக்கிபிடித்து டயரை மாற்ற சொன்னார். ஆனாலும் டயரை மாட்ட அந்த பெண்மணியால் முடியவில்லை.

பின்னர் அவரை தள்ளுவண்டியின் டயரை பொருத்திக் கொடுத்து, பதற்றமில்லாமல் செல்லுங்கள் என்று ஆறுதல்படுத்தி அனுப்பி வைத்தார். தொடர்ந்து தனது பணியில் ஈடுபட்டார்.

இந்த காட்சிகளை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர,  அது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஓபன் மைக்கில் ஆய்வாளர் நாவுக்கரசனைப் பாராட்டி, வெகுமதியும் அறிவித்துள்ளார்.

Also see... சீனாவில் இருந்து வந்த பிளேக் நோய்தான் கொரோனா: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு...

 
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading