முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அங்கீகாரம் இல்லாததால் தொடக்க நிலையிலேயே முடங்கி விடுகின்றனர் - வெள்ளி வென்ற மணிமாறன்

அங்கீகாரம் இல்லாததால் தொடக்க நிலையிலேயே முடங்கி விடுகின்றனர் - வெள்ளி வென்ற மணிமாறன்

வெள்ளி பதக்கம் வென்ற மணிமாறன்

வெள்ளி பதக்கம் வென்ற மணிமாறன்

இனி வரும் போட்டிகளிலும் பதக்கம் வெல்வேன் என்று மணிமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், பலர் தொடங்க நிலையிலேயே முடங்கிவிடுவதாக வலுதூக்கும் வீரர் மணிமாறன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய வலுதூக்கும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மணிமாறன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 74-கிலோ எடைப்பிரிவில் ஸ்குவாட், டெட் லிப்ட் மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை வசப்படுத்தினார்.

அத்துடன், ஆசியாவின் இரும்பு மனிதர் என்ற பட்டத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த இவர், புதுக்கோட்டை வனத்துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பதக்கம் வென்று, சொந்த ஊர் திரும்பிய மணிமாறனுக்கு திருச்சியில் ரயில் நிலையத்தில், உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமானோர் ஒன்று திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வெள்ளி பதக்கம் வென்ற மணிமாறன்

அப்போது பேசிய மணிமாறன், தமிழகத்தில் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால் அவர்கள் வெளியுலகிற்கு தெரியாமலே உள்ளனர் என்றார். எனவே அரசு உதவி செய்து ஊக்குவித்தால், தன்னைப்போல நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாகுவார்கள் என தெரிவித்தார்.

Also see... ’தங்கம் வென்ற போட்டியில் கிழிந்த காலணிகளுடன் ஓட்னேன்: கோமதி

Also see... மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது எனக்கு தேசிய கீதம் இசைத்தது இசைத்தது போல இருந்தது: கோமதி உருக்கம்

First published:

Tags: Asian Athletics Championship