16 வயது மகள் வீட்டைவிட்டு வெளியேறியதால் தந்தை தற்கொலை - சிறுமியைத் திருமணம் செய்தவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கட்டட தொழிலாளி கைதுசெய்யப்பட்டார்.

16 வயது மகள் வீட்டைவிட்டு வெளியேறியதால் தந்தை தற்கொலை - சிறுமியைத் திருமணம் செய்தவர் கைது
கோப்புப்படம்
  • Share this:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் கரிக்கான் குளத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி பாலமுருகனின் 16 வயது மகள் கடந்த 8-ஆம் தேதி காணாமல் போனதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கரூர் மாவட்டம் தோகைமலையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சுரேஷுடன் சிறுமி சென்றிருப்பதை அறிந்து அவரது தந்தை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


இதற்கிடையே, திருப்பூரில் தங்கியிருந்த சுரேஷ் மற்றும் சிறுமியை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், இருவரும் திருமணம் செய்துகொண்டது தெரியவந்ததால், சுரேஷைக் கைது செய்தனர். மேலும், சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading