ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி

திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி

திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி

2009-ம் ஆண்டு 67.35% என்ற அளவில் பதிவான வாக்குகள் 2014-ம் ஆண்டு 3.76% உயர்ந்து 71.11% ஆக பதிவாகின.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான திருச்சி எனும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி 1951-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

1951-ம் ஆண்டு நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் மதுரம் எனும் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்துல் சலாம் வெற்றி பெற்றார்.

1962, 1967, 1971 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் சி.பி.எம் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. அதன் பின்னர் தி.மு.க ஒருமுறையும் காங்கிரஸ் கட்சி 3 முறையும் த.மா.க ஒரு முறையும் பா.ஜ.க 2 முறையும் ம.தி.மு.க ஒரு முறையும் அ.தி.மு.க 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

பல கட்சிகள் மாறி மாறி வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதியாகவும் திருச்சிராப்பள்ளி இருந்து வருகிறது. இறுதியாக 2009 மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் தான் முதன்முறையாக திருச்சிராப்பள்ளி அ.தி.மு.க வசம் சென்றது.

அ.தி.மு.க வேட்பாளர் ப.குமார் 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 2,98,710 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான் 2,94,375 வாக்குகள் பெற்று வெறும் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ப.குமார் 4,58,478 வாக்குகள் பெற்று அபார வெற்றியைப் பதிவு செய்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாருபாலா தொண்டைமான் வெறும் 51,537 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தார்.

அ.தி.மு.க-வை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க-வின் அன்பழகன் 3,08,002 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். 2009-ம் ஆண்டு 67.35% என்ற அளவில் பதிவான வாக்குகள் 2014-ம் ஆண்டு 3.76% உயர்ந்து 71.11% ஆக பதிவாகின.

First published:

Tags: Cauvery Delta Lok Sabha Elections 2019, Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Tiruchirappalli S22p24