முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருச்சியில் இரண்டு கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

திருச்சியில் இரண்டு கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

தேர்தல் அறிவிப்பு

தேர்தல் அறிவிப்பு

  • Last Updated :

திருச்சியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிராம ஊராட்சி, ஒன்றிய, மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கான நேரடி ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் 2 கட்டமாக நடைபெற்றது.

ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைக் கொண்ட நகர்ப்புற உள்ளாட்சிக்கானத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சி, துவாக்குடி, மணப்பாறை, துறையூர் ஆகிய 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் என மொத்தம் 252 கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Also see:

First published:

Tags: Local Body Election 2019