"சார்... நீங்க சொல்லுங்க உண்மையிலேயே தேர்தல் நடக்குமா..?" மாவட்ட ஆட்சியரை அதிர வைத்த திமுக பிரமுகர்

அனைத்துக்கட்சி கூட்டம்
  • News18
  • Last Updated: December 4, 2019, 1:25 PM IST
  • Share this:
திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக பிரமுகரின் கேள்வியால் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதிமுக, திமுக, பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.


தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறும். விதிமீறல்கள் இருந்தால் தகவல் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

அப்போது, மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். என்று திமுக பிரநிதி வழக்குரைஞர் பாஸ்கரன், கதிர்வேல் ஆகியோர் வலியுறுத்தினர். அதிமுக தவிர மற்ற கட்சியினரும் இதே கருத்தை முன் வைத்தனர்.
மேலும் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது அநீதி என்றும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Loading...

இதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர் அரசின் கொள்கை முடிவு குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. உங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றார்.

தொடர்ந்து தேர்தல் அறிவிப்பு குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, மணிகண்டம் திமுக ஒன்றிய செயலாளர் கருப்பையா மாவட்ட ஆட்சியரைப் பார்த்து, ”சார் நீங்க சொல்லுங்க, உண்மையிலேயே தேர்தல் நடக்குமா...?” என்று நகைத்தபடி கேட்க, கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதி சுரேஷ் "மாவட்ட ஆட்சியரை ஏங்க கோத்து விடுறீங்க...அவுரு நல்லவரு” என்று கூற காரசாரமாக இருந்த இடம் கலகலப்பாக மாறியது.

அனைத்து கட்சியினரும் கலகலப்பாக பேசிக்கொண்டனர்.
இதே ஒற்றுமையுடன், அமைதியாக அனைத்துக் கட்சிகளும் தேர்தலை நடத்திக் கொடுக்க வேண்டும் கூறி கூட்டத்தை முடித்துவைத்தார் மாவட்ட ஆட்சியர்.

பின்னர், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமாமராக்கள் பொருத்த வேண்டும் என்கிற கோரிக்கை மனுவை பா.ஜ.க, அதிமுகவினர் தவிர மற்ற அனைத்து கட்சியினரும் கையெழுத்திட்டு கொடுத்தனர்.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...