கமலுக்கு அரசியல் பக்குவம் தேவை: தமிழிசை

கோட்சேவை தேசபக்தர் என்று சொன்னவரை நாங்கள் கண்டித்துள்ளோம் என்றும் பாஜக எப்போதும் மக்கள் பக்கம்தாம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

Vaijayanthi S | news18
Updated: May 17, 2019, 10:04 AM IST
கமலுக்கு அரசியல் பக்குவம் தேவை: தமிழிசை
தமிழிசை சவுந்தரராஜன்
Vaijayanthi S | news18
Updated: May 17, 2019, 10:04 AM IST
கமலுக்கு நிறைய அரசியல் பக்குவம் தேவை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேவையில்லாமல் சில கருத்துகளை கமல் பதிவு செய்கிறார். இது அவரது முதிர்ச்சியின்மையா?, சிறுபான்மை வாக்குகளை பெற நினைக்கிறாரா ? அல்லது இப்படித்தான் பேச வேண்டும் என்று நினைக்கிறாரா? என்று தெரியவில்லை.

புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்து முதிர்ச்சியின்மையோடு பேசுகிறார். திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்து விட்டதால் எது வேண்டுமானாலும் பேசலாம், மக்கள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் கமல்ஹாசன் பேசுகிறார். கமலுக்கு நிறைய அரசியல் பக்குவம் தேவை என்றார்.

மேலும் கமல் மீதான இந்த தாக்குதலை வரவேற்க முடியாது.
தேர்தல் நேரத்தில் பலதரப்பட்ட தொண்டர்கள் கூடும் பட்சத்தில் இதுபோன்ற பிரிவினைக் கருத்துகளை பேசினால் அமைதியான சூழலை எதிர்பார்க்க முடியாது. அதனால் எதிர் விளைவுகள் வரும் என்று உணர்ந்து அவர் பேச வேண்டும் என்று கூறினார்.

ஏன் பலர் புண்படும் வகையில் பிரிவினை கருத்துக்களை பேசவேண்டும் ? இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்து தீவிரவாதம் என்று ஏன் பேச வேண்டும்? என்று பலவிதமான கேள்விகளை எழுப்பினார். மேலும் பாஜகவின் நிலைப்பாடு நடுநிலையானது என்றும் கூறினார்.

மேலும் கோட்சேவை தேசபக்தர் என்று சொன்னவரை நாங்கள் கண்டித்துள்ளோம். கட்சி கட்டுப்பாட்டுக்கு இணங்க அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார் என்று கூறினார்.
Loading...
ஹைட்ரோகார்பன் குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், ஹைட்ரோகார்பன் எடுக்க நிறுவனங்களுக்கு பரிசோதனையின் அடிப்படையில் அனுமதி  கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Also see... தீவிர அரசியலில் இறங்கிவிட்டோம்... தீவிரமாகத்தான் பேசுவோம்: கமல்

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626