திருச்சியில் நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - மனைவி, 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழப்பு

திருச்சியில் நகைக்கடை அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி - மனைவி, 2 மகன்கள் பரிதாபமாக உயிரிழப்பு
உயிரிழந்தவர்கள்
  • News18
  • Last Updated: January 14, 2020, 10:48 AM IST
  • Share this:
திருச்சியில் நகைக்கடை அதிபர் ஒருவர், மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊரணி பகுதியில் செல்வராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு செல்லம் என்ற மனைவியும் நிகில், முகில் என இரண்டு மகன்கள் இருந்தனர்.

இவர்கள் திருச்சியில் உள்ள மகாராஜ் என்ற விடுதியில் குடும்பத்துடன் அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்றிரவு தாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக உறவினர் குரு கணேஷுக்கு செல்வராஜ் செல்போனில் தகவல் அனுப்பியுள்ளார்.


இதனை பார்த்து அதிர்ந்த குரு கணேஷ், அவசர அவசரமாக மகாராஜா விடுதியை வந்தடைந்தார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்வராஜ் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து பார்த்த போது செல்லம், நிகில் மற்றும் முகில் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வராஜை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அறையை சோதனை செய்ததில் செல்வராஜ் எழுதிய கடிதம் சிக்கியது.

அதில் மன வளர்ச்சி குன்றிய தனது மூத்த மகன் நிகிலை சரியாக கவனிக்கை முடியாததாலும், கடன் தொல்லை காரணமாகவும் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதாக எழுதப்பட்டிருந்தது.மனைவி, மகன்களை செல்வராஜ்தான் கழுத்தறுத்து இருப்பார் என்பதால் மூவர் உயிரிழப்பையும் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also see...
First published: January 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading