Home » News » Tamil-nadu » TRICHY INSTEAD OF CORONA RECOVERY SOME SIDE EFFECTS IS THERE SKD SARA

கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் தொடரும் நுரையீரல், நரம்பு மண்டல பாதிப்புகள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

கொரோனா நோயிலிருந்து மீண்ட பிறகும் அந்த வைரஸ் தாக்கம் பல்வேறு விதமாக உடலில் தெரிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் தொடரும் நுரையீரல், நரம்பு மண்டல பாதிப்புகள் - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பொதுவாக நுரையீரலில் தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வைரஸ் நெகடிவான பிறகும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவிலிருந்து மீண்டு சில வாரங்கள் வரை சிலருக்கு ஆக்சிஜன் கான்சண்ட்ரேடர் கருவி பொருத்த வேண்டிய அவசியம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். நுரையீரல் முழுவதும் குணம்டைய ஆறு மாத காலம் கூட ஆகலாம். நுரையீரல் திறன் சீராக இல்லாத அந்த கால கட்டத்தில் வேறு தொற்று உடனே ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நல்ல உணவும் ஓய்வும் அவசியம் என மருத்துவர் கமல்- ஆஸ்துமா அலர்ஜி நிபுணர்  தெரிவிக்கின்றனர்.

இதை தவிர பல நோயாளிகளுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்ததே இதன் காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்விலும் 28% நோயாளிகளுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது.


வைரஸ் பாதிப்பிலிருந்து முதலில் மீண்ட சீன நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் மிதமான அல்லது தீவிர அறிகுறிகளுடன் கொரோனாவை எதிர்கொண்ட நோயாளிகளில் நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

கொரோனா வைரஸ் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அதிகமாக சந்தேகிக்கப்படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு மூளையில் சில பாகங்களில் சிதைவு ஏற்படுவது மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சில நோயாளிகள் குணமடைந்து இரண்டு முதல் நான்கு வாரங்களில் கூட ரத்த கட்டுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்த குழாய்களில் ஏற்படும் ரத்த கட்டுகள் உரிய நேரத்தில் கண்டறியப்படாவிட்டால் இருதயம், நுரையீரல் என பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படு ஆபத்தாக முடியக் கூடும். ரத்தக் கட்டின் தீவிரத்தை குறைப்பதற்கான மருந்துகள்  தேவைப்படும் நோயாளிகளுக்கு அவர்கள் வீடு திரும்பும் போது வழங்கப்படுவதாக மருத்துவர் சுப்ரமணியன் சுவாமிநாதன் கூறுகின்றனர்.

கொரோனாவின் இந்த பாதிப்புகள் சில மாதங்களில் மறைந்து விடுமா அல்லது நீண்ட கால பாதிப்பாக உடலில் இருக்குமா என்பது ஆய்வுகளுக்கு பின்னரே தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவில் இந்த ஆய்வை மேற்கொள்ள ஐ.சி.எம்.ஆர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading