வேறு பெண்ணைத் திருமணம் செய்ய என் மகளைக் கொன்றுவிட்டார்! மருமகன் மீது மாமியார் புகார்

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நாகஜோதி என்ற 24 வயது இளம்பெண், கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா?  தற்கொலை செய்து கொண்டாரா? என்ன நடந்தது நாகஜோதிக்கு?

Web Desk | news18
Updated: August 8, 2019, 12:19 PM IST
வேறு பெண்ணைத் திருமணம் செய்ய என் மகளைக் கொன்றுவிட்டார்! மருமகன் மீது மாமியார் புகார்
மனைவியை கொன்று வீசிய கிணறு
Web Desk | news18
Updated: August 8, 2019, 12:19 PM IST
மணப்பாறை அருகே இளம்பெண் கிணற்றில் சடலமாக கிடந்த விவகாரத்தில், வேறு பெண்ணை மணக்க அவரது கணவரே கொலை செய்ததாக இளம்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

என்ன நடந்தது மணப்பாறையில்?

திருச்சி மாவட்டம் மணப்பாறை பாரதியார் நகரைச் சேர்ந்தவர் நாகஜோதி. திங்கட்கிழமை காலை குழந்தைகளைப் பள்ளிக்கு தனது டிவிஎஸ் எக்செல் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பவில்லை. ஒரு நாள் முழுவதும் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், மனைவியைக் காணவில்லை என அவரது கணவர் தங்கப்பாண்டி மணப்பாறை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.


மறுநாள் செவ்வாய்க்கிழமை மணப்பாறை அடுத்த உடையாபட்டி அருகே விவசாயக் கிணற்றில் நாகஜோதி சடலமாக மிதந்தது தெரியவந்தது. சிறிது துாரத்தில் அவரது இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கிணற்றடியில் அவரது செருப்பும் கிடந்தது.

நாகஜோதியின் சடலத்தை மீட்ட போலீசார்

சம்பவ இடத்திற்கு தீயணைப்புதுறையினருடன் சென்ற மணப்பாறை போலீசார்  இளம்பெண்ணின் சடலத்தை கயிறு கட்டி மீட்டனர். அதன்பின்னர் முதற்கட்ட விசாரணையில் சில தகவல்கள் கிடைத்தன.

Loading...

நாகஜோதியின் கணவர் தங்கப்பாண்டி, சென்னையில் உள்ள பிரபல ஜூவல்லரி நிறுவனத்தில் பொற்கொல்லராகப் பணிபுரிந்தார். சென்னையில் இருந்து தங்கப்பாண்டிக்கு மும்பைக்குப் பணியிட மாற்றம் ஆன நிலையில் தங்கப்பாண்டி அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார்.

கணவன் - மனைவி இடையே பிரச்னை

அப்போது தன்னையும் குழந்தைகளையும் மும்பைக்கு அழைத்துச் செல்லும்படி நாகஜோதி கணவர் தங்கப்பாண்டியிடம் வற்புறுத்தியுள்ளார். ராஜாளிப்பட்டி அருகே இடம் வாங்கியிருப்பதால் அதற்கான கடனை அடைத்த உடன் சொந்த ஊருக்கே வந்து விடுவதாக தங்கப்பாண்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக கணவர் - மனைவி இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

மகளை கொலை செய்ததாக நாக்ஜோதியின் தாய் புகார்

அந்தப் பிரச்னைக்கும் நாகஜோதியின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தங்கப்பாண்டிக்கு உள்ளூரிலேயே வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாகவும் அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் தனது மகளைக் கொலை செய்து விட்டதாக நாகஜோதியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகஜோதியின் உறவினர்கள் சாலை மறியல்

நாகஜோதியின் மரணத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி, புதன்கிழமை மணப்பாறை அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானத்திற்குப் பின் மறியல் கைவிடப்பட்டது. நாகஜோதியின் கணவர் தங்கப்பாண்டி உள்ளிட்ட சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க... மருத்துவ அலட்சியத்தால் தாய்-குழந்தை மரணம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...