தளர்வு அளிக்கப்பட்டாலும் வடமாநில தொழிலாளர்கள் இல்லாததால் 50% இருக்கைகளோடு உணவகங்கள் திறப்பதில் சிக்கல்..

உணவங்கள், டீ கடைகளில் 50% இருக்கைகளோடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட இந்த தளர்வில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அனுமதித்தாலும் சென்னையில் பெரும்பாலான உணவங்கள் பார்சல் மட்டுமே வழங்குகின்றன.

தளர்வு அளிக்கப்பட்டாலும் வடமாநில தொழிலாளர்கள் இல்லாததால் 50% இருக்கைகளோடு உணவகங்கள் திறப்பதில் சிக்கல்..
உணவகங்கள்
  • Share this:
புதிய தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக உணவங்கள், டீ கடைகளில் 50% இருக்கைகளோடு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட இந்த தளர்வில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அனுமதித்தாலும் சென்னையில் பெரும்பாலான உணவங்கள் பார்சல் மட்டுமே வழங்குகின்றன.

திருச்சியில், டீ கடைகள் மட்டும் தளர்வுகளுடன் செயல்படத் தொடங்கியுள்ளன. நேற்று வரை பார்சல் மட்டுமே வழங்கி வந்த டீ கடைகளில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அரசு அறிவித்த 50% இருக்கைகளுடன் கடையிலேயே தேநீர் அருந்துகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு டீ கடையில் டீ அருந்திய உற்சாகத்தில் இருக்கின்றனர் டீ பிரியர்கள்  ஆனால் டீ கடைகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துவிட்டதாகவும் ஊரடங்கால் டீ கடை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் டீ கடை உரிமையாளர்கள்.

உணவங்களை பொருத்தவரை தளர்வு அளிக்கப்பட்டாலும் சென்னையில் 90% உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்கப்படுகிறது.. ஒரு சில பெரிய உணவங்களில் மட்டுமே 50% இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படுகின்றனர்.


உணவங்களில் வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலானோர் வடமாநில இளைஞர்கள் இந்நிலையில்  வேலை இன்றி ஊருக்கு சென்ற வடமாநில இளைஞர்கள்  மீண்டும் பணிக்கு திரும்பாததால் வேலைக்கு ஆட்கள் இன்றி அரசு  தளர்வு அறிவித்தும் உணவங்களை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படியே திறந்தாலும் வாடிக்கையாளர்கள் வருவதில்லை என்கின்றனர் உணவக உரிமையாளர்கள்

அரசு தளர்வு அளித்தாலும் பொருளாதார நெருக்கடி, வேலைக்கு ஆட்கள் இல்லை, வியாபாரம் இல்லை இப்படி பல காரணங்களால் உணவங்கள் 50% இருக்கைகளோடு செயல்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. வரும் திங்கள் முதல் கணிசமான கடைகள் 50% இருக்கைகளோடு செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading