• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைக் கண்டித்து போராட்டம் - முருகன் வேடமணிந்த சிறுவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்பு

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைக் கண்டித்து போராட்டம் - முருகன் வேடமணிந்த சிறுவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்பு

கறுப்பர் கூட்டம்.

கறுப்பர் கூட்டம்.

கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதை கண்டித்து மணப்பாறையில் முருகன் வேடமணிந்த சிறுவன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
    கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியது தொடர்பாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருபவர்களுக்கு கடுமையான கண்டனங்கள் குவிந்து வரும் சூழலில் சுரேந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். அந்த சேனலின் நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

    இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோவில் முன்பு இந்து முன்னனி சார்பில் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதில் முருகன் வேடமணிந்த ஒரு சிறுவனும் கலந்து கொண்டார். அப்போது கந்தசஷ்டி கவசத்தின் சிறப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கியதோடு வேல் வேல் வீர வேல், வேல் வேல் வெற்றிவேல், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்று கோசங்கள் எழுப்பினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: