சொட்டுநீர் பாசனத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயிகள்!

சொட்டுநீர் பாசனத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயிகள்!
  • News18
  • Last Updated: August 24, 2019, 12:39 PM IST
  • Share this:
திருச்சியில் சொட்டுநீர் பாசனம் மூலம் மாற்றுப் பயிர்களை பயிரிட்டு, இருமடங்கு மகசூல் பெற்று, பட்டதாரி விவசாயிகள் முன் உதாரணமாக திகழ்கின்றனர்.

பருவமழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இன்றி குறுவை சாகுபடி செய்ய முடியாமல் கவலையடைந்துள்ள விவசாயிகளுக்கு மத்தியில், திருச்சி மாவட்டம் சிறுகமணி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தில் அசத்தி வருகின்றனர்.

முதுகலை தாவரவியல் பட்டம் பெற்ற சரவணன், படித்து முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற கூற்றுக்கிணங்க, வேலையை கைவிட்டு சாதிக்கும் நோக்கில் விவசாயத்தில் தடம் பதித்துள்ளார்.


உளுந்து பயறு அதிக மகசூல் பெறுவது குறித்து, வேளாண் அதிகாரிகளின் ஆலோசனை பெற்று விவசாயம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தில் மட்டும் கிடைக்கும் பயிர் வளர்ச்சி மருந்தை பயன்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், மஞ்சள் தேமல் போன்ற நோய் தாக்குதலில் இருந்து தப்பித்து, பூக்கள் உதிர்வது குறைந்து விளைச்சல் அதிகரிப்பதாகவும், குறைந்த காலத்தில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு லாபம் கிடைப்பதாகவும் சரவணன் கூறுகிறார்.

டெல்டா மாவட்டங்களில் காவிரி நீரை எதிர்பார்த்தே விவசாயம் செய்யப்படுகிறது. முன்பு ஆண்டுக்கு 11 மாதங்கள் கிடைத்த காவிரி நீர், தற்போது ஒன்று அல்லது 2  மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

இதை கருத்தில் கொண்டு, கிணற்று நீர் அல்லது சொட்டுநீர் பாசனத்தின் மூலம் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத்திலும் நவீன முறையை கையாண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் இருமடங்கு லாபம் பெற முடியும் என்பதற்கு இந்த விவசாயிகள் முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.

மேலும் படிக்க... மழைநீர் சேமிப்பால் கோடையை சமாளிக்கும் வேலூர் மருத்துவ தம்பதி

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading