காவல்துறை அதிகாரிகள் பலரின் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி

திருச்சி போலீஸ் டிஎஸ்பி செந்தில்குமார் பெயரில், அவரது புகைப்படத்துடன் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி நடைபெற்றிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

காவல்துறை அதிகாரிகள் பலரின் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி
கோப்புப்படம்.
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 5:50 PM IST
  • Share this:
திருச்சி டிஎஸ்பி செந்தில்குமார் பெயரில் தொடங்கப்பட்ட போலி முகநூல் கணக்கு மூலம் அவரது முகநூல் நண்பர்களுக்கு மெசேஞ்சரில் தொடர்புகொண்டு ஒரு கும்பல் பண மோசடி செய்துள்ளது. முகநூலில் தகவல் பறிமாற்றம் செய்த அந்தக் கும்பல், வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்து, அவசரத் தேவைக்காக பணம் வேண்டும் என்றும் விரைவில் அதைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை கூகுள் பேயில் போடச் சொல்லியுள்ளது.

அதன்படி பணம் போட்டதும் தொடர்பை துண்டித்துவிட்டு மாயமாகியுள்ளது. இது குறித்து நண்பர்கள் மூலம் தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த டிஎஸ்பி செந்தில்குமார், என்னுடைய பெயரில் யாராவது  முகநூலில் பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தன் முகநூல் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து திருச்சி சைபர் க்ரைம் பிரிவிலும் புகார் அளித்துள்ளார்.

டிஎஸ்பி செந்தில்குமார் மட்டுமின்றி திருச்சி மாநகர காவல் சிறப்பு எஸ்.ஐ ரவிக்குமார், சிறப்பு காவல் படையணி காவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரின் பெயரிலும் முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு பண மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.


Also read: நகரும் ரேஷன் கடைகள், சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோ உள்ளிட்ட சேவைகளைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி

மோசடியால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு போலீசார் தங்கள் முகநூல் பக்கங்களில் பதிவிட்டும், நண்பர்களுக்கு வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் அனுப்பியும் எச்சரித்துள்ளனர். சிலர் தங்களது முகநூல் கணக்கையே தற்காலிகமாக முடக்கி வைத்துவிட்டனர். மேலும், முதல்கட்ட விசாரணையில் வெளிமாநில கும்பல் கைவரிசை என்று தெரியவந்துள்ளது. மோசடி நபர்களின் எண்களில் தொடர்பு கொண்டால் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், இந்தியில் பேசியும், சுதாரித்து தொடர்பைத் துண்டித்துள்ளனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் ஏமாற்றப்பட்டால் காவல் துறையில் புகாரளித்து தீர்வு காண முயல்வார்கள். ஆனால், காவல்துறை அதிகாரிகளின் பெயரிலேயே மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading