திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் போராட்டம்!

இலங்கைத் தமிழர்கள் மட்டும் அடிக்கடி போராட்டம் நடத்தி வந்த நிலையில், முதல் முறையாக மற்ற வெளி நாட்டினரும் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டு கைதிகள் போராட்டம்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள்
  • News18
  • Last Updated: November 8, 2019, 1:11 PM IST
  • Share this:
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் குற்ற வழக்கில் தொடர்புடைய வெளி நாட்டினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக க்யூ பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள்,  தங்களை சட்ட விரோதமாக கைது செய்து சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்திருப்பதாகவும், தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்ய மறுப்பதாகவும் குற்றம்சாட்டி இலங்கைத் தமிழர்கள் 38 பேர் மற்றும் வங்கதேசத்தினர், பல்கேரியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 70 பேர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று தொடங்கினர்.

இலங்கைத் தமிழர்கள் மட்டும் அடிக்கடி போராட்டம் நடத்தி வந்த நிலையில், முதல் முறையாக மற்ற வெளி நாட்டினரும் தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Also see...

First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்