”அவரின் திட்டத்தால் பயனடைந்தேன்...” மோடிக்கு கோயில் கட்டி தினமும் பாலபிஷேகம் செய்யும் விவசாயி கூறுகிறார்

மோடியின் மீது தீராத அன்பு கொண்டதாலேயே இந்த கோவிலைக் கட்டியுள்ளார்.

”அவரின் திட்டத்தால் பயனடைந்தேன்...” மோடிக்கு கோயில் கட்டி தினமும் பாலபிஷேகம் செய்யும் விவசாயி கூறுகிறார்
மோடியின் கோயிலில் விவசாயி சங்கர்
  • News18
  • Last Updated: December 26, 2019, 3:30 PM IST
  • Share this:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கோவில் கட்டி தினமும் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வரும் சங்கர், தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பினார்.


இந்த நிலையில் துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.பா.ஜ.க.வின் தொண்டராகவும், எரகுடி விவசாய சங்க தலைவராக இருந்து வரும் சங்கரிடம் கோயில் பற்றி கேட்டபோது, “பிரதமர் மோடியின் மீது சிறுவயது முதலே கொண்ட அன்பால், எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோவில் கட்ட முடியவில்லை.கடந்த ஆண்டில் விவசாயத்தில் கிடைத்த பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன் என கூறினார்.

நீட் தேர்வின் மூலம் ஏழை எளிய மக்களும் மருத்துவ படிப்பு வசதியை பாரதப் பிரதமர் மோடி ஏற்படுத்தித் தந்ததால் தனது இளைய மகனை நீட் பயிற்சி வகுப்புகாக அனுப்பி வைத்துள்ள சங்கர் தனது மகன் உறுதியாக மருத்துவராக படித்து மோடியின் நீட்தேர்வு திட்டத்தால் வெற்றி பெறுவான் என கூறினார். விவசாயிகளுக்கு வருடம்தோறும் 6000 ரூபாய் உதவித்தொகை மற்றும் சொட்டு நீர் பாசனம் வீட்டுக்கொரு கழிப்பறைத் திட்டம் ஆகிய பாரத பிரதமர் மோடியின் திட்டத்தால் தான் பயன் அடைந்ததால் மோடிக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக சங்கர் தெரிவித்தார்

 

 
First published: December 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading