கபசுரக் குடிநீர் என்ற பெயரில் விற்கப்பட்ட போலி மருந்துகள் பறிமுதல்!

கபசுரக் குடிநீர் என்ற பெயரில் விற்கப்பட்ட போலி மருந்துகள் பறிமுதல்!
(மாதிரி படம்)
  • Share this:
நோய் எதிர்ப்பு சக்திக்காக கபசுரக் குடிநீரை பொதுமக்கள் அதிகம் வாங்கி வரும் சூழலில்,  அதன் பெயரில் விற்கப்பட்ட போலி மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ளவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீர் சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதையடுத்து கபசுரக் குடிநீர் தூள் வாங்க அரசு சித்த மருத்துவமனைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தலைமையிலான குழுவினர் சித்த மருந்து விற்பனைக் கடைகளில்,  சோதனை நடத்தினர்.அப்போது, கபசுரக் குடிநீர் என்று விற்கப்பட்ட போலி மருந்துகள் மொத்தம் 50க்கும் மேற்பட்ட பாட்டில்களைக் கொண்ட 5 கிலோ  பறிமுதல் செய்யப்பட்டன.


கபசுரக் குடி நீர் தேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதால், கபசுரக் குடிநீர் அல்லது அதற்கு நிகரானது என்று அனுமதியின்றியும் போலியாகவும் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,  கபசுரக் குடிநீரின் 100 கிராமின் அதிகபட்ச விலையே ₹ 110 என்றாலும் ₹ 250 - 350, வரை விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள்,  அனுமதி பெற்ற தயாரிப்புதானா?  என்றும், காலாவதி தேதி உள்ளிட்டவற்றை சரியாக பார்த்தும் வாங்க வேண்டும். போலிகளை வாங்கி ஏமாற வேண்டாம். அரசு சித்த மருத்துவமனையில் இலவசமாக வாங்கிக் கொள்ளலாம். அதேநேரத்தில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் பயன்படுத்த கூடாது என்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading