Home /News /tamil-nadu /

மகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நாளை பக்தர்களுக்கு தடை.. இன்றே குவிந்த பக்தர்கள்...

மகாளய அமாவாசை: ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் நாளை பக்தர்களுக்கு தடை.. இன்றே குவிந்த பக்தர்கள்...

அம்மாவாசை

அம்மாவாசை

மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு, திருச்சி அம்மா மண்டபத்திற்கு வருவதற்கு நாளை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இன்றே ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மகாளய அமாவாசை தினத்தன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக நாளை பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இதனால் இன்றைய தினமே பக்தர்கள் அம்மா மண்டபம் படித்துறையில் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் காவிரியில் புனித நீராடிச் சென்றனர்.

    மேலும் படிக்க...முன்பதிவு செய்தோருக்கு மட்டும் புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு அனுமதி.. ரங்கநாதர் கோயில் நிர்வாகம் அறிவிப்பு..



    இதனிடையே மகாளய அமாவாசையன்று சமயபுரம் மாரியம்மனுக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கோயில் இணை ஆணையர் அசோக்குமார் அறிவித்துள்ளார்.

    முடி காணிக்கை செலுத்த காலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Mahalaya Amavasai, Srirangam

    அடுத்த செய்தி