கொரோனா விதிமீறல்: திருச்சி மாநகர காவல் துறையால் ஒரே நாளில் ரூ. 2.34 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதிமீறல்: திருச்சி மாநகர காவல் துறையால் ஒரே நாளில் ரூ. 2.34 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதியை மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கும் காவல் துறை

கொரோனா விதிமீறலில் ஈடுப்பட்டவர்களிடம் இருந்து நேற்று ஒருநாளில் மட்டும் திருச்சியில்  ரூ. 2.34 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், திருச்சி மாநகரின் அனைத்து காவல் நிலையங்களிலும் 14 இடங்களில் பொதுமக்களுக்கு நோய் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசம் வழங்கப்பட்டது.

ஆனாலும் விதியை மீறி முகக்கவசமின்றி சுற்றிய 1174 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூபாய்.2,34,000 அபராதம் தொகை விதிக்கப்பட்டது, தனிநபர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செயல்பட்டவர்கள் மீது 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ₹33,500அபராதம் விதிக்கப்பட்டது.



மேலும் படிக்க... தானும் சாதித்து சாதனையாளர்களையும் உருவாக்கி வரும் ஒரு ரியல் ஹீரோ திருச்சி மணிகண்டன் ஆறுமுகம்...

இனிவரும் காலங்களில் கொரோனோ நோய்த்தொற்றைக் குறைப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: