சுர்ஜித்தை மீட்பதில் ஏன் தாமதம்?... திருச்சி ஆட்சியர் பதில்

சுர்ஜித்தை மீட்பதில் ஏன் தாமதம்?... திருச்சி ஆட்சியர் பதில்
  • News18
  • Last Updated: October 28, 2019, 7:20 AM IST
  • Share this:
குழி தோண்டும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் காலதாமதம் ஏற்படுவதாக திருச்சி ஆட்சியர் சிவராஜ் கூறியுள்ளார்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 1 மீட்டர் அகழத்தில் குழி தோண்டப்பட்டு அதன் மூலம் குழந்தையை மீட்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். எனினும்


புதிதாக துளையிடப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் பணி மெதுவாக நடக்கிறது. இதனால சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது

இதுகுறித்து திருச்சி ஆட்சியர் சிவராஜ், ‘புதிதாக துளையிடப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் காலதாமதம் ஏற்படும். மாலை 3 மணிக்குள் துளையிடும் பணிகள் நிறைவடையும். குழந்தை தற்போது 88 அடி ஆழத்தில் உள்ளது. 90 அடி தோண்ட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது வரை 24 அடி தோண்டப்பட்டுள்ளது. சுர்ஜித்துக்கு தொடர்ந்து ஆக்‌ஷிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவர் இறங்கும் அளவுக்கு 1 மீட்டர் அகலத்தில் குழி தோண்டப்பட்டு வருகிறது’ என்று பேசியுள்ளார்

 
First published: October 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...