குப்பை கொட்டச் சென்ற 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை - 3 தனிப்படை அமைப்பு

திருச்சியில் 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

குப்பை கொட்டச் சென்ற 9-ம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை - 3 தனிப்படை அமைப்பு
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 7, 2020, 7:01 AM IST
  • Share this:
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று மதியம் குப்பை கொட்டுவதற்காக சென்ற மாணவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.





படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்






திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading