• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புதிய கட்டுப்பாடுகளால் திருச்சி மாநகரப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவு

புதிய கட்டுப்பாடுகளால் திருச்சி மாநகரப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவு

பேருந்து

பேருந்து

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், திருச்சி மாநகரப் பேருந்துகளில் பயணிகள் குறைவாகவே காணப்படுகின்றனர்.

  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், திருச்சி மாநகரப் பேருந்துகளில் பயணிகள் குறைவாகவே காணப்படுகின்றனர்.

புதிய கட்டுப்பாடுகளின் படி, பேருந்துகளில் இருக்கையில் மட்டும் பயணிக்க வேண்டும். நின்று கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆட்டோக்களில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும்.

திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி. மதம் சார்ந்த திருவிழாக்கள் இல்லை. திருமணம் போன்ற நிகழ்வுகளில் 100 பேர், துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி. முகக் கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை 10க்கும் குறைவாக இருந்த புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கத்தை தொட்டு,  நேற்றைய தினம் 213 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, திருச்சி காந்தி சந்தை மொத்த விற்பனை சந்தையில் சில்லரை விற்பனை இல்லை. நாளை முதல் மொத்த விற்பனை மட்டும் நடைபெறும். சில்லரை விற்பனை ஜி கார்னர் ரயில்வே மைதானத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பேருந்துகளில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், திருச்சியிலிருந்து செல்லும் புறநகர்ப் பேருந்துகள் சிலவற்றில்  மட்டும் இருக்கைகள் முழுமையாக பயணிகள் செல்கின்றனர். மாநகரப் பேருந்துகளில் பெரும்பான்மையான பயணிகள் குறைவாகவே  செல்கின்றனர். சில பேருந்துகளில் ஓரிரு பயணிகள் மட்டுமே சென்றனர்.

Must Read :  திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3ஆம் தேதி நடைபெறும் என தகவல்

 

தொலைதூரப் பேருந்துகளிலும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இதையடுத்து,  பரபரப்பாக காணப்படும் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்பட்டது.  இதனால் பேருந்துகளின் வருவாய் பாதிப்பைப் போலவே ஆட்டோ ஓட்டுநர்களும் வருவாய் இழந்துள்ளனர். பல மணி நேரமாக ஒரு சவாரி கூட இல்லை என்றும் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: