Home /News /tamil-nadu /

திருச்சி - செங்கல்பட்டு சிறப்பு ரயில், இனி விழுப்புரம் வரை மட்டுமே..

திருச்சி - செங்கல்பட்டு சிறப்பு ரயில், இனி விழுப்புரம் வரை மட்டுமே..

கோப்பு படம்

கோப்பு படம்

திருச்சி - செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் ஊரடங்கு காரணமாக இனி விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திருச்சி - செங்கல்பட்டு இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் ஊரடங்கு காரணமாக இனி விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனிடையே கடந்த ஜூன் 12-ம் முதல் செங்கல்பட்டு - திருச்சி இருமார்க்த்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் 12 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சியிலிருந்து செங்கல்பட்டு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் இனி விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பார்க்க:-

    குறித்த தேதிக்கு முன்பாகவே கடன் இல்லாத நிலை என்ற இலக்கை எட்டியுள்ளோம் - ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி

    ஊரடங்கு குறித்த அரசின் அடுத்த அறிவிப்பு வரும் வரை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படாது என்று கூறப்படுகிறது. எனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டண தொகை திருப்பித் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Special trains

    அடுத்த செய்தி