அதிமுக உடனான கூட்டணி குறித்து பாஜக தேசியத் தலைமை அறிவிக்கும் - பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன்..
அதிமுக உடனான கூட்டணி குறித்து பாஜக தேசியத் தலைமை அறிவிக்கும் - பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன்..
தமிழக பாஜக தலைவர் எல். முருகன்
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி குறித்து அ.தி.மு.க உறுதி செய்த நிலையில் கூட்டணி குறித்து பா.ஜ.க வின் தேசிய தலைமை அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.
திருச்சியில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நிவர் புயல் காரணமாக ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வெற்றி வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில், இனி மீதமுள்ள மாவட்டங்களிலும் வேல் யாத்திரை, புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் நான்காம் தேதி ஆறுபடை வீடுகளில் வழிபாடு மட்டும் நடத்தி விட்டு டிசம்பர் 5-ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறும் என்றார்.
தமிழக அரசு நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் பா.ஜ.க வினர் ஈடுபடுவார்கள் என்று கூறினார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அ.தி.மு.க உறுதி செய்த நிலையில், பா.ஜ.க தரப்பில் கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்றார். மேலும் அதில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆலோசனையில் பாஜக-விற்கு 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு யூகம்தான் எனக் கூறினார். எத்தனை இடங்கள் கேட்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், அது குறித்து இப்பொழுது ஜாதகம் பார்க்க தேவையில்லை என்று கூறினார்.
மேலும் ஏழு பேர் விடுதலை விவகாரம் பற்றிய கேள்விக்கு பதில் கூறியவர், ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்றும் சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் அறிவிப்பார் என்றும் கூறினார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.