திருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணம் என்று போலீசார் தகவல்..!

திருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணம் என்று போலீசார் தகவல்..!
  • News18
  • Last Updated: January 27, 2020, 10:55 AM IST
  • Share this:
திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டல் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவராக விஜயரகு என்பவர் இன்று அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் காலை உயிரிழந்தார்.


முன்விரோதம் காரணமாக விஜயரகுவை அரிவாளால் வெட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை காந்தி சந்தை காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.ஏற்கனவே 2 முறை விஜயரகு மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. காந்தி சந்தை காவல் நிலையத்திலும் பாபு மீது புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து அண்மையில் பிணையில் வந்துள்ளார் மிட்டாய் பாபு.இந்த நிலையில், விஜயரகுவின் சடலம் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் பா.ஜகவினர் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்