பழிக்குப் பழி..வெறி..வங்கி மேலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை...

திருச்சியில் ரயில்வே போலீஸ் கொலையில் பழிக்குப் பழியாக வங்கி மேலாளர் ஓட ஓட துரத்தி கொலை செய்யப்பட்டார்.

பழிக்குப் பழி..வெறி..வங்கி மேலாளர் ஓட ஓட விரட்டி படுகொலை...
திருச்சியில் ரயில்வே போலீஸ் கொலையில் பழிக்குப் பழியாக வங்கி மேலாளர் ஓட ஓட துரத்தி கொலை செய்யப்பட்டார்.
  • Share this:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாளையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வண்ணமணி. இவருக்கு கோவேந்திரன், புகழேந்தி என இரு மகன்கள் மற்றும் ஒரு மகள்.




இதில் புகழேந்தி திருச்சி தில்லை நகரில் இயங்கி வரும் யெஸ் வங்கியின் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவருடைய பக்கத்து வீட்டில் திருச்சியில் ரயில்வே போலீசாக பணியாற்றிய 57 வயதான ரங்கராஜ் தங்கியிருந்தார். இவர்கள் இருவருக்கும் இடத்தகராறு இருந்து வந்துள்ளது.

கடந்த வருடம் ஜூலை 13ஆம் தேதி இரு வீட்டாருக்கும் இடையே தகராறு முற்றியது. இதில் வங்கி மேலாளர் புகழேந்தியின் அண்ணணான கோவேந்திரன் கத்தியால் குத்தியதில், ரயில்வே போலீஸ் ரங்கராஜ் உயிரிழந்தார்.அவரது கொலையில் கோவேந்திரன், அவரது தந்தை வண்ணமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் ஜாமினில் வெளி வந்தனர்.

ஜாமினில் வெளிவந்த அவர்கள் இனி இந்த இடத்தில் இருக்க வேண்டாம் என நினைத்து, வீட்டை காலி செய்து குடும்பத்தோடு மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பாச்சூர் கிராமத்திற்கு குடி பெயர்ந்தனர்.

போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை காலி செய்துவிட்டு உடைமைகளை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அண்ணன் கோவேந்திரன் பாச்சூருக்கு புறப்பட்டார். பின்னர் தம்பி புகழேந்தி, தனது நண்பர் சதீஷ் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் பாச்சூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த கார் ஒன்று புகழேந்தி வந்த இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. அதில் நிலை தடுமாறி புகழேந்தி மற்றும் சதீஷ் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தனர்.

அப்போது காரிலிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கிய ஒரு கும்பல், இருவரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கியுள்ளது.

இருவரும் வேறு வேறு திசையில் ஓட, புகழேந்தியை விடாமல் துரத்திய அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வங்கி மேலாளர் புகழேந்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று புகழேந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தாக்குதலில் தலையில் காயமடைந்த புகழேந்தியின் நண்பர் சதீஷை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட பொறுப்பு காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கொலையாளிகளை பிடிக்க ஜீயபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நிலத்தகராறில் ரயில்வே போலீஸ் ரங்கராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக, அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.



மேலும் படிக்க...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம்கட்ட ஆன்லைன் சிஏ வகுப்புகள் எப்போது தொடங்கும்?

நிலத் தகராறில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பகை இரு குடும்பத்திலும் ஒரு உயிரை காவு வாங்கிய சம்பவம் திருச்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading