திருச்சியில் அத்திவரதர்!

பக்தர்கள் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த திருப்தி திருச்சியில் கிடைப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் அத்திவரதர்!
திருச்சியில் அத்திவரதர்
  • News18
  • Last Updated: August 8, 2019, 11:02 PM IST
  • Share this:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதரை போல் இன்று முதல் திருச்சியிலும் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், தற்போது நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய லட்சக்கணக்கில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், முதியோர், குழந்தைகளுக்கு, அத்திவரதர் தரிசனம் என்பது சிரமமாக உள்ளது.

இந்நிலையில், இன்று முதல் திருச்சியிலும் ஒரு அத்திவரதர் உதயமாகி, இவர்களின் குறையை தீர்த்து கண்குளிர காட்சியளித்து கொண்டிருக்கிறார். திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ருத்ராபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.


அப்போது சதாசிவம், ரங்கநாதர், நாயன்மார்கள், வள்ளி திருமணம் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சந்தன காப்பு அலங்காரங்கள் செய்து பக்தர்கள் வழிபடுவார்கள். இதன்படி, இந்த ஆண்டும் ருத்ராபிஷேகத்தை முன்னிட்டு,
அத்திவரதர் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

திருச்சியில் அத்திவரதர்
ஏராளமான பக்தர்கள் இன்று காலைமுதல் திருச்சி அத்திவரதரை வழிபட்டு வருகின்றனர். நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 10-ம் தேதி வரை திருச்சி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்த திருப்தி கிடைப்பதாக தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... அத்திவரதர் தரிசனம்: காஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்