• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எம்.ஜி.ஆர் சிலையை தானே துடைத்து சுத்தம் செய்து மாலை அணிவித்த அமைச்சர் நடராஜன்

எம்.ஜி.ஆர் சிலையை தானே துடைத்து சுத்தம் செய்து மாலை அணிவித்த அமைச்சர் நடராஜன்

எம்.ஜி.ஆர் சிலையை துடைத்து, மாலை அணிவித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

எம்.ஜி.ஆர் சிலையை துடைத்து, மாலை அணிவித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

திருச்சியில் இருந்த எம்.ஜி.ஆர் சிலையை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தானே துடைத்து மாலை அணிவித்திருப்பது பலரையும் வியக்கவைத்துள்ளது.

  • Share this:
திருச்சி கண்டோன்மெண்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலையை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துடைத்து, சுத்தம் செய்து, மாலை அணிவிக்கும் வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் அதிகமாக பகிரப்படுகிறது.

திருச்சி மாநகரத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு தனது கட்சி அலுவலகத்திற்குச் செல்லும்போது எம்.ஜி.ஆர் சிலை தூசி படிந்திருப்பதைக் கண்டு காரிலிருந்து இறங்கி, தானே துணியைக் கொண்டு அதைத் துடைத்து சுத்தம் செய்து, மாலை அணிவித்தார்.

எம்.ஜி.ஆரின் கனவான திருச்சியில் 2வது தலைநகரை அமைக்க வேண்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: