போலியான முகவரியால் குழப்பம்... கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..

போலியான முகவரியால் குழப்பம் ஏற்படுவதால் இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போலியான முகவரியால் குழப்பம்... கொரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்..
கோப்புப் படம்
  • Share this:
போலியான முகவரியால் குழப்பம் ஏற்படுவதால் இனி கொரோனா பரிசோதனைக்கு ஆதார் அட்டையை காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை கொரோனா பிரிவில் தற்போது 350-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் 50-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் வந்தோர் உட்பட இதுவரை  25,000 பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறிகுறியோடு தாங்களாகவே வந்து சளி மாதிரி பரிசோதனை செய்வோரும் உண்டு. அப்படி பரிசோதனை செய்து கொள்வோரின் முகவரிகள், தொலைபேசி எண்களைப் பெற்றுக் கொண்டு, பரிசோதனை முடிவில் தொற்று உறுதியானதும் தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், கொரோனா அறிகுறியோடு சளி மாதிரி சோதனைக்கு வரும் சிலர் தொடர் சிகிச்சை, தனிமைப்படுத்தலுக்கு பயந்து போலியான முகவரிகளை கொடுத்துள்ளனர். அப்படி போலியான முகவரி,  செல்போன் எண் கொடுத்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை காவல் துறையின் உதவியோடு தேடி வருகின்றனர்.

Also read... பாஜக ஆட்சியில் சீன இறக்குமதி அதிகம் - ராகுல் காந்தி விமர்சனம்இதையடுத்து பரிசோதனைக்கு வரும் நபரின் ஆதார் அட்டை எண் மற்றும்  நகல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வருவோர் மருத்துவமனை ஊழியர்களால்  அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
First published: July 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading