போலீஸ் என்று மிரட்டி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. திருச்சியில் நடைபெற்ற கொடூரம்

விடுதிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லூரி வளாக காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மாணவியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மணிகண்டன்.

Web Desk | news18
Updated: August 5, 2019, 9:26 PM IST
போலீஸ் என்று மிரட்டி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. திருச்சியில் நடைபெற்ற கொடூரம்
விடுதிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லூரி வளாக காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மாணவியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மணிகண்டன்.
Web Desk | news18
Updated: August 5, 2019, 9:26 PM IST
திருச்சியில் போலீஸ் எனக்கூறி மிரட்டி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். 

திருச்சி துவாக்குடியில் என்.ஐ.டி எனப்படும் தேசிய தொழில்நுட்பக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

மத்திய அரசு ஊழியரான அம்மாணவியின் தந்தை சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். தந்தையை சந்திக்க அடிக்கடி செல்லும்போது, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் கடந்த 1-ம் தேதி விடுதியில் இருந்து அனுமதியின்றி மாணவி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திருச்சி திரும்பிய அவர், தனது காதலருடன் கல்லூரி முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, அங்கு மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் வந்துள்ளனர். மணிகண்டன் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்தி, இருவரையும் யார் என விசாரித்ததுடன், இரவில் இங்கு நின்றுகொண்டிருப்பது ஏன் எனவும் கேட்டுள்ளார்.

வெளியூர் சென்றுவிட்டு வந்ததாகவும், விடுதியில் விடுவதற்காக வந்த நண்பருடன் பேசிக்கொண்டிருப்பதாகவும் மாணவி கூறியுள்ளார்.  இருட்டில் இங்கு நிற்பது ஆபத்தானது எனக் கூறிய மணிகண்டன், கல்லூரி விடுதியில் கொண்டு விடுவதாக மாணவியை அழைத்துள்ளார்.

Loading...

அதற்கு மாணவி மற்றும் அவரது காதலர் மறுப்பு தெரிவித்ததுடன், தானே சென்று விடுவதாக மாணவி கூறியுள்ளார். இதை ஏற்காத மணிகண்டன், காதலரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் விடுதிக்கு செல்லும் வழியில் உள்ள கல்லூரி வளாக காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்று மாணவியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மணிகண்டன். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவி மொபைல் மூலம் காதலர் மற்றும் சக மாணவிகளுக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் அந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மாணவியின் தந்தைக்கும் தகவல் கொடுத்தனர். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவி மற்றும் அவரது காதலர் கூறிய அடையாளங்கள் மற்றும் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மணிகண்டனை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். மேலும் மணிகண்டனுக்கு உதவிய அவரது நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Also watch: காஷ்மீர் விவகாரம்! தமிழக தலைவர்கள் கருத்துகள் 

First published: August 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...