80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு; உளவியல் பயிற்சி அளிக்க திட்டம் - திருச்சி டிஐஜி நடவடிக்கை

சாத்தான்குளம் சம்பவம் காரணமாக திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணனின் முன்மாதிரி முயற்சி எடுத்துள்ளார்.

80 காவலர்கள் பணியில் இருந்து விடுவிப்பு; உளவியல் பயிற்சி அளிக்க திட்டம் - திருச்சி டிஐஜி நடவடிக்கை
டிஐடி பாலகிருஷ்ணன்
  • Share this:
திருச்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் மக்களோடு நேரடித் தொடர்பில், காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் 80 பேர் காவல் நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஒரு மாத காலம் பொதுமக்களுடன் நல்லுறவை கடைபிடிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதில், பொதுமக்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடந்து கொள்வது, முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் சூழல் , காரணம் கண்டறிந்து, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட (Cognitive Behavioral Traing) வை அளிக்கப்படுகிறது.




பணியின் போது பொதுமக்களுடன் நல்லுறவை கடைபிடிக்காதவர்கள், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என பல்வேறு தரவுகளின் அடிப்படையில் 5 மாவட்டங்களில் 180 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க...திருச்சியில் முதியவரை தாக்கும் காவலர் - வைரலாகும் வீடியோ

இவர்களில் முதல்கட்டமாக 80 பேருக்கு தற்போது பயிற்சி அளிக்கப்படுவதாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டை மரண வழக்கில் காவல் துறையினர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணனின் இந்த முன்மாதிரி முயற்சி பலரின் பாராட்டைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading