முகமூடி... கையுறை... மிளகாய் பொடி...! திருச்சி நகைக்கடையில் ரூ. 50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை

முகமூடி... கையுறை... மிளகாய் பொடி...! திருச்சி நகைக்கடையில் ரூ. 50 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள்
  • News18
  • Last Updated: October 3, 2019, 11:04 AM IST
  • Share this:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில், பல கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் லலிதா ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இரண்டு தளங்களை கொண்ட இந்த கட்டடத்தில், இன்று கீழ் தளத்தில் இருந்த நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ரூ.50 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.


நள்ளிரவில் கடையின் பின்புறம் வழியாக சுவரில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள், நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கையில், அதிகாலை சுமார் 1 மணியளவில் முகமூடியுடன் கையுறை அணிந்து நுழைந்த இரு கொள்ளையர்கள் நகைகளை பையில் கொள்ளயடித்துச் சென்றது பதிவாகியுள்ளது.

நகைக்கடையின் பின்புறம் இருக்கும் கல்லூரி மைதானத்தின் வழியாக அவர் உள்ளே வந்துள்ளனர். மோப்ப நாய் தங்களை கண்டறியக்கூடாது என்பதற்காக மிளகாய் பொடியும் அங்கே தூவியுள்ளனர்.

Loading...

தடவியல் துறையினர் நகைக்கடையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published: October 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...