காரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது - சித்த மருந்து எனச் சொல்லி தப்பிக்க பிளான்

காரில் போதைப்பொருள் கடத்திய பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது - சித்த மருந்து எனச் சொல்லி தப்பிக்க பிளான்
போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பாஜக பிரமுகர்
  • News18
  • Last Updated: August 12, 2020, 12:15 PM IST
  • Share this:
சித்த மருத்துவர் காரில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் பா.ஜ.க பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் காரில் போதைப்பொருள் (ஓபியம்) கடத்தி வருவதாக  போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பிவு (OCIU) டி.எஸ்.பி செந்தில்குமார், போதைப் பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி  காமராஜ் தலைமையிலான போலீசார் திருச்சியில் வாகன சோதனை நடத்தி வந்தனர்.

அப்போது பெரம்பலூரைச்  சேரந்தவர் அடைக்கலராஜ் ( 40 ) திருச்சி மாவட்டம் நொச்சியத்தை அடுத்த மான்பிடிமங்கலத்தை சேர்ந்த ஆதடையான் (50) இருவரும் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.800 கிலோ போதை மருந்தான ஓபியம் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சர்வதேச அளவில் ₹ 10 லட்சம் என்றும் தெரியவந்தது.


இருவரையும் கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர். இந்தகார் பெரம்பலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவருக்கு சொந்தமானது என்பதும், சித்த மருத்துவரிடம், அடைக்கலராஜ் தனது காரை கொடுத்து விட்டு, மருத்துவரின் காரை எடுத்து சென்ற விபரமும் தெரியவந்துள்ளது .

மேலும் இந்த போதைப்பொருள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்துள்ளது என்பதும், பெரம்பலூரைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் மூலம் அது தங்களுக்கு கிடைத்தாகவும் பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர்.

Also read... கோயில் திருவிழாவில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்குஇந்த கடத்தலுக்கு தொடர்புடைய மேலும் 3 பேர் என மொத்தம் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்ட அடைக்கலராஜ் பா.ஜ.கவில் மாவட்ட நிர்வாகியாக உள்ளார்.சித்த மருத்துவரின் காரில் போதைப் பொருளை கொண்டு சென்றால், வழியில் போலிசார் பிடித்தால் சித்த மருந்து என்று சொல்லி சமாளித்து விடலாம் என்று திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading