திருச்சியில் பாதுகாப்பு கருதி வாரத்திற்கு 40 காவலர்கள் தனிமைப் படுத்திக்கொள்ள உத்தரவு!

அண்மையில் மணப்பாறையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவத்திற்கு ரத்த தானம் செய்த காவலர் அபுதாகீர்-க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது

திருச்சியில் பாதுகாப்பு கருதி வாரத்திற்கு 40 காவலர்கள் தனிமைப் படுத்திக்கொள்ள உத்தரவு!
காவலர் அபுதாகீரை பாராட்டும் எஸ்.பி.
  • Share this:
காவலர்களின் பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் வாரத்திற்கு 40 காவலர்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம்  திருவெறும்பூர் கோட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர், பெல், துவாக்குடி நவல்பட்டு, மணிகண்டம்  திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில்  பணியாற்றும் காவலர்களில் கொரோனோ நோய் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வீடுகளில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இவ்வாறு பாதுகாப்பு பணியில் உள்ளவர்களை வாரத்திற்கு 40 பேர் என  சுழற்சி முறையில் ஒரு வார காலம் தங்கள் வீட்டில் தங்களது குடும்பத்தாரிடம் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிட்டுள்ளர். அடுத்த வாரம் அடுத்த 40 பேர் என சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காவலர்களின் பாதுகாப்பு கருதி எஸ்.பி ஜியா உல்ஹக் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், திருச்சி மாவட்ட காவல்துறையின் கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு, போக்குவரத்து பணிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கான உதவிகள் சேவைகள் குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

இதில், அண்மையில் மணப்பாறையில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவத்திற்கு ரத்த தானம் செய்த காவலர் அபுதாகீர் உணவின்றி தவித்த மக்களுக்கு உதவிய காவலர்கள் பணிகளையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.பியின் இது போன்ற பாராட்டு, அங்கீகாரம் தொடர்ந்து கொரோனா ஒழிப்பு களத்தில் சோர்வைப் போக்கி ஊக்கப்படுத்துகிறது என்கிறார்கள் காவலர்கள்.

Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading