ஃபேஸ்புக்கில் காதல்.. காதலியை தேடி நேரில் சென்றவரிடம் பைக்கை பறித்து விரட்டிய கும்பல்
முகநூல் மூலம் காதல் வலைவீசி, பண்ருட்டி இளைஞரை திருச்சிக்கு வரழைத்து அவரது இருசக்கர வாகனத்தை பறித்த பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- News18 Tamil
- Last Updated: September 9, 2020, 11:43 AM IST
மனைவி இருக்க முகநூலில் அறிமுகமான பெண்ணைத் தேடிச் சென்ற இளைஞரிடம் பச்சைக்கிளி முத்துச்சரம் பட பாணியில் ஒரு கும்பல் பணம், இருசக்கர வாகனத்தை பறித்துக்கொண்டு விரட்டியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரது மகன் 31 வயதான வினோத் குமார். 12 ஆம் வகுப்புவரை படித்த இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது. வெப்டிசைனராக பணியாற்றி வந்த வினோத்குமாருக்கு முகநூல் மூலம் திருச்சியை சேர்ந்த நிஷா என்ற பெண் நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.
தனது படத்தை அரைகுறை உடையுடன் அனுப்பி சாட் செய்துள்ளார். இளம்பெண்ணின் வலையில் விழுந்த வினோத்குமாரிடம் செல்போன் எண்ணைப் பெற்று அந்த பெண் தேனொழுக பேசி வந்துள்ளார். தன்னை பார்க்க வருமாறு கடந்த 5ஆம் தேதி வினோத்குமாரை திருச்சிக்கு அழைத்துள்ளார். எப்போது பார்க்கலாம் என காத்திருந்த வினோத்குமாரும் அந்த பெண்ணை பார்க்க திருச்சிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். வேலை விஷயமாக திருச்சி செல்வதாக மனையிடம் கூறிவிட்டு முகநூல் காதலியை பார்க்க தனது இருசக்கர வாகனத்தில் பந்தாவாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.
திருச்சி சென்று நிஷாவிற்கு போன் செய்த போது, காஜாமலைக்கு வருமாறும் அங்குள்ள பள்ளி ஒன்றின் அருகில் தான் காத்திருப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் ஆள் அரவமின்றி இருந்த அப்பகுதிக்கு வினோத்குமார் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் வினோத்குமாமைர மடக்கிப் பிடித்துள்ளது. கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பர்ஸ், ஸ்மார்ட் போன், ஏடிஎம் கார்டு மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு துரத்தியுள்ளனர்.செய்வதறியாது திகைத்து நின்ற வினோத்குமார் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். நிஷாவின் போன் எண்ணை வைத்து அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரது கூட்டாளிகள் முகமது யாசிர், ஆசிக் மற்றும் நிஷா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும் படிக்க...இன்று கூடுகிறது திமுகவின் பொதுக்குழு
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்தக் கும்பல், திருமணமான, கவுரமான குடும்ப பின்னணி கொண்ட இளைஞர்கள், நடுத்தர வயது உள்ளவர்களை குறிவைத்து இதுபோன்று மோசடியை அரங்கேற்றி வந்தது தெரிய வந்துள்ளது.
குடும்ப மானத்திற்கு பயந்து அவர்கள் புகார் கொடுக்கமாட்டார்கள் என்பதால் மோசடியை தொடர்ந்து வந்துள்ளனர். மூவரையும் சிறையிலடைத்த போலீசார் தலைமறைவாகியுள்ள இந்த கும்பலைச் சேர்ந்த அஜீஸ், சித்திக், அன்சாரி ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக சபல புத்திக்காரர்களை குறிவைத்து மோசடி நடப்பதாகவும், உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வெற்றிச்செல்வன் என்பவரது மகன் 31 வயதான வினோத் குமார். 12 ஆம் வகுப்புவரை படித்த இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது. வெப்டிசைனராக பணியாற்றி வந்த வினோத்குமாருக்கு முகநூல் மூலம் திருச்சியை சேர்ந்த நிஷா என்ற பெண் நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.
தனது படத்தை அரைகுறை உடையுடன் அனுப்பி சாட் செய்துள்ளார். இளம்பெண்ணின் வலையில் விழுந்த வினோத்குமாரிடம் செல்போன் எண்ணைப் பெற்று அந்த பெண் தேனொழுக பேசி வந்துள்ளார்.