திருச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்!

சென்னையைச் சேர்ந்த அஜீஸ் கான் என்பவரிடம் 255 கிராம் தங்கமும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலீஸ் ரகுமான் என்பவரிடம் 459 கிராம் தங்கமும் பிடிப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்!
திருச்சி விமானநிலையம்
  • Share this:
திருச்சி விமான நிலையத்தில் 55 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கிலோ 423 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து கொழும்பு வழியாக திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, சென்னையைச் சேர்ந்த அஜீஸ் கான் என்பவரிடம் 255 கிராம் தங்கமும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலீஸ் ரகுமான் என்பவரிடம் 459 கிராம் தங்கமும் பிடிப்பட்டது.


இதைபோன்று துபாயில் இருந்து இலங்கை வழியாக வந்த விமான பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹைதர் அலியிடம் 708 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் 3 பேரிடம் அழைத்து சென்று சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Watch

First published: October 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...